/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூத்த குடிமக்களுக்கான இல்லம் கட்டுமான பணிக்கு பாராட்டு
/
மூத்த குடிமக்களுக்கான இல்லம் கட்டுமான பணிக்கு பாராட்டு
மூத்த குடிமக்களுக்கான இல்லம் கட்டுமான பணிக்கு பாராட்டு
மூத்த குடிமக்களுக்கான இல்லம் கட்டுமான பணிக்கு பாராட்டு
ADDED : ஜூலை 31, 2025 11:26 PM

திருப்பூர்; திருப்பூர் லயன்ஸ் இன்டர்நேஷனல், 324 --சி மாவட்டம் சார்பில், மூத்த குடிமக்களுக்கான இல்லம், திருப்பூர் லயன்ஸ் ேஹப்பி ேஹாம் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டு வருகிறது.
இதை பார்வையிட மாவட்டத்தின் அனைத்து லயன்ஸ் நிர்வாகத்தினர் அழைக்கப்பட்டனர். கட்டட பணிக்கு நன்கொடை வழங்கியவர்கள் கவுரவிக்கப்பட்டனர். இடத்தை கொடையாக வழங்கிய அறக்கட்டளை தலைவர் 'டிஎஸ்பி' மயில்சாமி பேசினார். அறக்கட்டளை துணைத் தலைவர்கள் மெஜஸ்டிக் கந்தசாமி, பிரைம்டெக்ஸ் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அறக்கட்டளை பொருளாளர் சுப்ரமணியம் வரவேற்றார். லயன்ஸ் பன்னாட்டு அறக்கட்டளை வாயிலாக நிதி ஏற்பாடு செய்த, கடந்த, 2023 - 24ல் இத்திட்டத்தை அறிமுகம் செய்த முன்னாள் கவர்னர் ஜெயசேகரன், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கட்டட பணிகளை பார்வையிட்ட லயன்ஸ் நிர்வாகிகள், திருப்பூர் லயன்ஸ் ேஹப்பி ேஹாம் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களை பாராட்டினர்.'வரும் செப்., மாதம், இதுபோன்று மற்றுமொரு நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது; கட்டடப் பணிக்கு நிதியுதவி வழங்க கொடையாளர்கள் முன்வரலாம்' என, அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.