/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒருமைப்பாட்டு முகாம் மாணவருக்கு பாராட்டு
/
ஒருமைப்பாட்டு முகாம் மாணவருக்கு பாராட்டு
ADDED : பிப் 06, 2024 12:42 AM
திருப்பூர்:மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் சார்பில், கர்நாடகா மாநிலம், குல்பர்கா பல்கலையில் இன்று முதல் வரும், 12 ம் தேதி வரை தேசிய ஒருமைப்பாடு முகாம் நடக்கிறது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.
கோவை பாரதியார் பல்கலையில் இருந்து, 10 பேர் தேர்வாகியுள்ளனர். இதில், சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - 2 மாணவர் நவீன்குமார் (விலங்கியல் துறை), கயல்விழி (கணினி பயன்பாடு) இருவரும் தேர்வாகியுள்ளனர்.
அத்துடன் தமிழக என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர் அணியை வழிநடத்திச் செல்ல, சிக்கண்ணா கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2, ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தேர்வாகியுள்ளார். பேராசிரியர் மற்றும் மாணவ, மாணவியர் கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள், நேற்று வாழ்த்தி, வழியனுப்பி வைத்தனர்.

