/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெருங்கும் தீபாவளி; கேமராவுடன் கண்காணிப்பு கோபுரம்
/
நெருங்கும் தீபாவளி; கேமராவுடன் கண்காணிப்பு கோபுரம்
நெருங்கும் தீபாவளி; கேமராவுடன் கண்காணிப்பு கோபுரம்
நெருங்கும் தீபாவளி; கேமராவுடன் கண்காணிப்பு கோபுரம்
ADDED : அக் 18, 2024 06:38 AM

திருப்பூர் : தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கண்காணிக்கும் பணியை மேற்கொள்ள 'சிசிடிவி' கேமரா உடனான கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும், 12 நாளே உள்ள நிலையில், பிரதான ரோடுகளில் துணி கடைகள், பர்னிச்சர் கடை உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் மக்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்து விட்டது.
கடந்த சில நாட்களாக குமரன் ரோடு உள்ளிட்ட பிரதான ரோடு மற்றும் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ரோடுகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. துணி கடை, பர்னிச்சர் கடைகளில் மக்கள் வர துவங்கி விட்டனர். மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி, குற்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க தற்போது 'மப்டி'யில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகம் உள்ளது. கூட்டத்தை பயன்படுத்தி சிலர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, மாநகரில் முக்கிய பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி சுறு சுறுப்பாக நடந்து வருகிறது.
மாநகராட்சி சந்திப்பு, குமரன் ரோடு உள்ளிட்ட மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களை கண்டறிந்து, அங்கு கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.
அந்த கோபுரத்தில், 'சிசிடிவி' கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இன்னும் தேவையான இடங்களை கண்டறிந்து, கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளது.
இப்பணிகள் இன்னும் சில நாட்களில் முழுமையாக நிறைவு பெறும் என்று போலீசார் தெரிவித்தனர்.
நகரில் வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு செய்கின்றனர்.
ஒவ்வொரு சிக்னல்களில் உள்ள போக்குவரத்து போலீசார் 'மைக்' மூலம் சாலை விதிகளை மதிக்க அறிவுறுத்துவதோடு, மக்கள் கூட்டத்தில் உடமைகளை பாதுகாத்து விழிப்போடு இருக்கவும் கேட்டுக்கொள்கின்றனர்.