sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 சேலம் - கோவை ரயிலுக்கு ஒப்புதல் 4 மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு

/

 சேலம் - கோவை ரயிலுக்கு ஒப்புதல் 4 மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு

 சேலம் - கோவை ரயிலுக்கு ஒப்புதல் 4 மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு

 சேலம் - கோவை ரயிலுக்கு ஒப்புதல் 4 மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : மார் 08, 2026 05:03 AM

Google News

ADDED : மார் 08, 2026 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: கடந்த, 2021 மார்ச்சில் கொரோனா பாதிப்பின் போது பல ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. அதில், சேலம் - கோவை மெமு ரயிலும் ஒன்று. அதன்பின் இயக்கத்துக்கு வரவில்லை. ஐந்து ஆண்டுகளாகியும், மெமு ரயில் இயக்கத்துக்கு மறுஒப்புதல் வழங்காததால், பயணிகள் சிரமம் தொடர்கிறது.

சேலம் - கோவை இடையே பயணித்த வந்த ஒரே மெமு (மெயின்லைன் எலக்ரிக் மல்டிபல் யூனிட்) ரயில் இது மட்டுமே. இந்த ரயில், சேலத்தில் புறப்பட்டு மகுடஞ்சாவடி, சங்ககிரி, ஈரோடு, விஜயமங்கலம், ஊத்துக்குளி, திருப்பூர் வழியே கோவை செல்லும். சேலம் முதல் கோவை வரை வழியோர அனைத்து ஸ்டேஷன்களில் நின்று சென்றதால், நான்கு மாவட்ட பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், அலுவலர், பணியாளர் என ஆயிரக்கணக்கானோர் பயனடைந்து வந்தனர்.

தற்போது, பொள்ளாச்சி - பாலக்காடு புதிய மெமு ரயிலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், சேலம் - கோவை ரயிலுக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. இதனால், கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் ஆகிய நான்கு மாவட்ட பயணிகள் சிரமம் தொடர்கிறது. இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் பரிசீலித்து, உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என, நான்கு மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us