sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

முதலீட்டு மானிய திட்டத்தில் பயன் பெற நிபந்தனையில் தளர்வு! : சாய ஆலைகள் சங்கத்தினர் வேண்டுகோள்

/

முதலீட்டு மானிய திட்டத்தில் பயன் பெற நிபந்தனையில் தளர்வு! : சாய ஆலைகள் சங்கத்தினர் வேண்டுகோள்

முதலீட்டு மானிய திட்டத்தில் பயன் பெற நிபந்தனையில் தளர்வு! : சாய ஆலைகள் சங்கத்தினர் வேண்டுகோள்

முதலீட்டு மானிய திட்டத்தில் பயன் பெற நிபந்தனையில் தளர்வு! : சாய ஆலைகள் சங்கத்தினர் வேண்டுகோள்


ADDED : மார் 08, 2026 05:03 AM

Google News

ADDED : மார் 08, 2026 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தமிழக அரசின், 25 சதவீத மானியத்துடன் கூடிய முதலீட்டு மானிய திட்டத்தில், அதிகபட்ச நிபந்தனைகளை தளர்த்தினால் மட்டுமே பயன்பெற முடியும் என சாய ஆலைகள் தெரிவித்துள்ளன.

திருப்பூர் பின்னலாடை துறையில், 'நிட்டிங்', சாய ஆலைகள் மற்றும் பிரின்டிங் நிறுவனங்களில், நவீன இயந்திரங்கள் நிறுவும் பணி கடந்த 10 ஆண்டுகளாக தடைபட்டது. ஒவ்வொரு பட்ஜெட் அறிவிப்பையும் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த தொழில்துறையினருக்கு, தமிழக அரசு ஆறுதலான அறிவிப்பை வெளியிட்டது.

சாய ஆலைகளில், நவீன இயந்திரங்கள் நிறுவ ஏதுவாக, முதலீட்டு மானிய திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சாய ஆலைகளில் நவீன இயந்திரங்கள் வாங்கி நிறுவ, 25 சதவீத மானியம் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது. தொழில்துறையினரும், அதற்காக முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அறிவிப்பு வெளியான வேகத்துக்கு திட்ட பணிகள் துவங்கவில்லை; துவக்கத்திலேயே, அதிகபட்ச கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், யாருமே பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டது.

இதுதொடர்பான முறையீடுகளை ஏற்று, இத்திட்டத்தின் அடிப்படையான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டது. சாய ஆலைகள், முழு அளவில் பயன்பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. முதலீட்டு மானிய திட்டத்துக்காக, தமிழக அரசு சார்பில் ஜவுளித்துறை அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. விண்ணப்பத்தை, இக்குழுவினர் ஆராய்ந்து, ஏற்றுக்கொண்டால் மட்டுமே, அடுத்தகட்ட பரிசீலனை நடக்கும். அதன்படி, நுாற்றுக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்தனர். இருப்பினும், தொடர்ச்சியான நிபந்தனைகளால், 10 பேர் கூட இதுவரை மானியம் பெற முடியவில்லை என்பதே யதார்த்தம்.

தளர்த்த வேண்டும் திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:

முதலீட்டு மானிய திட்டத்தால், திருப்பூர் பயன்பெறும் என்று நம்பினோம். இருப்பினும், மாசுக்கட்டுப்பாடு வாரிய அனுமதி, தடையில்லா சான்று என, தேவையில்லாத பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. அரசு திட்டத்தில் மானியம் பெற, அடிப்படையில் அத்தியாவசியமான விதிமுறைகளை மட்டும் விதித்தால் எளிமையாக இருக்கும்.

மாறாக, இத்திட்டத்தில், அடுக்கடுக்காக புதிய நிபந்தனை விதிப்பதால், விரல்விட்டு எண்ணக்கூடிய ஆலைகள் மட்டுமே பயன்பெற முடியும். எனவே, தமிழக அரசு, அதிகபட்ச நிபந்தனைகளை தளர்த்தி, முதலீட்டு மானிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அப்போதுதான், புதிய தொழில்நுட்பங்கள் திருப்பூருக்கு வந்துசேரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us