/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சத்யசாய் மந்திரில் ஆராதனா மகோத்சவம்
/
சத்யசாய் மந்திரில் ஆராதனா மகோத்சவம்
ADDED : ஏப் 24, 2025 10:48 PM

உடுமலை; உடுமலை டி.வி., பட்டணம் சத்யாசாய் மந்திரில், ஆராதனா மகோத்சவம் நேற்று நடந்தது.
மகோத்சவத்தையொட்டி, நேற்று காலை, 5:15 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், நாகர சங்கீர்த்தனம் நடந்தது. காலை, 6:00 மணிக்கு, பிரசாந்தி கொடியேற்றம் நடந்தது.
காலை, 6:45 மணிக்கு சிறப்பு பாதாபிேஷகம் மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனையும், காலை, 11:00 மணிக்கு நாராயண சேவை நடைபெற்றது. மாலை பல்லக்கு ஊர்வலம், சாய் பஜன் தொடர்ந்து பஞ்சார்த்த கீர்த்தனை நடந்தது.
மகா மங்கள ஆரத்திக்கு பிறகு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது. இந்த மகோத்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
* பொள்ளாச்சி சத்யசாய் சேவா சமிதியில், ஸ்ரீ சத்யசாய் பாபாவின் ஆராதனை நாளையொட்டி காலை, 5:20 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நகர சங்கீர்த்தனம், நீர்மோர் சேவை, நாராயண சேவை நடைபெற்றது. மாலையில் சிறப்பு சொற்பொழிவு, சாய் பஜன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

