/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கே.என்.,புரம் திறந்தவெளி சந்தை மேம்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு?
/
கே.என்.,புரம் திறந்தவெளி சந்தை மேம்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு?
கே.என்.,புரம் திறந்தவெளி சந்தை மேம்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு?
கே.என்.,புரம் திறந்தவெளி சந்தை மேம்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு?
ADDED : ஜன 18, 2025 12:22 AM

பல்லடம், ; கே.என்.,புரத்தில் செயல்பட்டு வரும் திறந்தவெளி வார சந்தையை மேம்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பல்லடம் ஒன்றியம், செம்மிபாளையம் ஊராட்சி, கே.என்.புரம் பகுதியில், வாரந்தோறும் ஞாயிறன்று சந்தை செயல்படுகிறது. கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள காலி இடத்தில், திறந்தவெளியில், இந்த சந்தை செயல்படுகிறது.
வாரந்தோறும், சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள், தொழிலாளர்கள் சந்தைக்கு சென்று காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். திறந்த வெளியில் செயல்பட்டு வரும் இந்த சந்தையை மேம்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து, கே.என்., புரம் வட்டார பொதுமக்கள் கூறியதாவது:
கே.என்.புரம், சாமிகவுண்டம்பாளையம், லட்சுமி மில்ஸ் சுற்றுவட்டார பகுதியில், வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். கே.என்.புரத்தில், வாரந்தோறும் நடைபெறும் காய்கறி சந்தை மூலம் தொழிலாளர்கள் அதிக அளவில் பயனடைகின்றனர்.
நுாற்றுக்கணக்கான வியாபாரிகள் தற்காலிக கடை அமைத்தும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காய்கறிகள் வாங்கி பயனடைந்தும் வரும் இந்த சந்தை, நீண்ட காலமாகவே திறந்த வெளியில் செயல்பட்டு வருகிறது.
வெயில், மழை, காற்று காலங்களில், வியாபாரிகள், பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இப்பகுதியில் நிரந்தரமாக சந்தை அமைத்து, வியாபாரத்தை மேம்படுத்துவதன் மூலம், வியாபாரிகள், பொதுமக்கள் பயனடைவதுடன், ஊராட்சிக்கும் வருவாய் கிடைக்கும்.
இதனால், சந்தைக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த முடியும். மேலும், காய்கறி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக, தொழிலாளர்கள், பொதுமக்கள் நகரப்பகுதிக்கு வருவதும் குறையும் என்பதால், இதுகுறித்து அதிகாரிகள் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.