ADDED : அக் 30, 2024 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம் : திருப்பூரில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு அதிகளவிலான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.
சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்கள் வசதிக்காக திருப்பூர், பி.என்., ரோடு, புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகபட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட தொலைதுார ஊர்களுக்கு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
பஸ்ஸில் செல்லும் பயணிகள் வசதிக்காக அதிக அளவில் பஸ் இயக்கப்படுகிறது. அவர்கள் சிரமமின்றி வரிசையாக நின்று பஸ் ஏறும் வகையில் புது பஸ் ஸ்டாண்டில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.