/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தற்கொலைக்கு துாண்டுதல்; மின்வாரிய ஊழியர் கைது
/
தற்கொலைக்கு துாண்டுதல்; மின்வாரிய ஊழியர் கைது
ADDED : பிப் 16, 2025 11:51 PM
திருப்பூர்; தர்மபுரி மாவட்டம், தொப்பூரை சேர்ந்தவர் முனிராஜ், 26. குடும்பத்தினருடன் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் தங்கி, மின்வாரிய அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். இவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரான, மூன்று குழந்தைகளின் தாயான, 27 வயது பெண்ணிடம் பழகி வந்தார்.
இதுகுறித்து அறிந்த பெண்ணின் கணவர் கண்டித்தார். பின், அவரிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். மின்வாரிய ஊழியர் வீட்டை விட்டு காலி செய்து சென்றார். அவ்வப்போது போனில் அழைத்து பெண்ணிடம் பேச முயன்றுள்ளார். இதன்காரணமாக, குடும்பத்தில் தம்பதியருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது.
கடந்த ஆண்டு நவ., 8ம் தேதி மனமுடைந்த அப்பெண் துாக்குமாட்டி இறந்தார். தொடர்ந்து, முனிராஜால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது என்றும், இறப்புக்கு காரணம் அவர் தான் என்று போலீசாருக்கு தெரிய வந்தது.
வெள்ளகோவில் போலீசார் தற்கொலைக்கு துாண்டியதாக வழக்குப்பதிவு செய்திருந்தனர். முனிராஜ் இடமாறுதலில் கிருஷ்ணகிரி சென்றிருந்த நிலையில், அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

