ADDED : ஏப் 07, 2025 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் - அவிநாசி ரோடு, இந்திரா நகரில் உள்ள வாழும் கலை பயிற்சி மையத்தில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
ஆதார் மருத்துவமனை, ஐ பவுண்டேஷன், ஸ்ரீ சாஸ்தா மைக்ரோ டைக்னோஸ்டிக் சென்டர், தைரோ கேர் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்ட முகாமை, ஆடிட்டர் சுப்பிரமணியன், வாழும் கலை மூத்த ஆசிரியர் தனபால் ராதாகிருஷ்ணன் ஆகியோர் துவக்கிவைத்தனர். மொத்தம் 50 பேருக்கு, முழு உடல் பரிசோதனை, கண் பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. வாழும் கலை அமைப்பினர், மொத்தம் 20 யூனிட் ரத்தம் தானமாக வழங்கினர்.