/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்திக்கடவு திட்டத்தில் 'செயற்கை இடர்பாடு' : நிலத்தடி நீர் செறிவூட்டும் பணியில் பெரும்பாடு

ADDED : நவ 06, 2025 11:45 PM

திருப்பூர்: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி, கடந்தாண்டு, அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் செயல்பாடுக்கு வந்தது. இத்திட்டத்தின் கீழ், 3 மாவட்டங்களில் உள்ள, 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டப்படுகிறது. இருப்பினும், 'பல குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டப்படுவதில்லை' என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.
'அனைத்து குளம், குட்டைகளுக்கும் சீரான நீர் செறிவூட்டல் பணி மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டம் நடத்துவது குறித்தும், அத்திக்கடவு ஆர்வலர்கள் ஆலோசித்து வருகின்றனர். அதே நேரம், 'அனைத்து குளம், குட்டைகளுக்கும் சீரான நீர் வினியோகம் இல்லை' என்பதை நீர்வளத்துறை அத்திக்கடவு - அவிநாசி சிறப்பு திட்ட அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதுதான் காரணம்
அதிகாரிகள் அளித்துள்ள விளக்கம்;
அத்திக்கடவு குழாய் பொருத்தப்பட்டுள்ள தடத்தில் பிற துறையினரால், அவர்களது திட்டம் சார்ந்த பணி மேற்கொள்ளும் போது, அத்திக்கடவு - அவிநாசி திட்ட குழாய்களை சேதப்படுத்தி விடுகின்றனர். சேதப்படுத்தப்பட்ட குழாய்களை சீரமைப்பு செய்து, குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்து, குளம், குட்டைகளுக்கு தடையின்றி நீர் சென்றடைவதற்கான பணிகள் நடந்து வருகிறது.பருவமழை காலங்களில், பவானி ஆற்றில் உபரிநீர் வரத்து, 250 கன அடிக்கு குறையாமல் தொடர்ந்து வரும் போது, நீரேற்று நிலையங்களில் உள்ள 'பம்ப்'களை முழுமையாக இயக்கி, குளம், குட்டைகளுக்கு நீர் சென்றடைவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும்.இவ்வாறு, விளக்கம் அளித்துள்ளனர்.