/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப்பணி: திருமுருகன்பூண்டியில் கலெக்டர் ஆய்வு
/
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப்பணி: திருமுருகன்பூண்டியில் கலெக்டர் ஆய்வு
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப்பணி: திருமுருகன்பூண்டியில் கலெக்டர் ஆய்வு
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப்பணி: திருமுருகன்பூண்டியில் கலெக்டர் ஆய்வு
ADDED : நவ 06, 2025 11:45 PM

திருப்பூர்: திருமுருகன்பூண்டி நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும், கழிவுநீர் சுத்தகரிப்பு நிலைய கட்டுமானப்பணி, நல்லாறு ஓடையை ஒட்டி மேற்கொள்ளப்படுவதாக எழுந்த புகார் அடிப்படையில், கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் விளக்கம் பெற்றார்.அன்னுாரில் துவங்கி அவிநாசி, திருமுருகன்பூண்டி வழியாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் சங்கமிக்கும் நல்லாற்றின், பெரும் பகுதி புல், புதர், செடி, கொடிகளால் சூழப்பட்டு, உருமாறி கிடக்கிறது. இந்நிலையில், 'நல்லாறு ஓடையை ஒட்டி, பூண்டி நகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப்பணி நடந்து வருகிறது. நீர்வளத்துறையின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்படும் இப்பணி குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; இப்பணியில் சுற்றுச்சூழல் பாதிக்கும்' என, நல்லாறு பாதுகாப்பு இயக்கத்தினர் சார்பில் கலெக்டர் மனீஷ் நாரணவரேயிடம் மனு வழங்கப்பட்டது.
இதையடுத்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப்பணி மேற்கொள்ளும் இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். 'வண்டிப்பாதை என வருவாய்த்துறை ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள இடத்தில் தான் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப்பணி நடக்கிறது' என்பது போன்ற விளக்கங்களை மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். பின், பூண்டி, ராக்கியாபாளையம் உள்ளிட்ட இடங்களில் நல்லாறு மற்றும் அதையொட்டி கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப்பணிகளை, கலெக்டர் பார்வையிட்டார்.

