/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம்
/
நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம்
ADDED : ஜன 01, 2026 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: கடத்துார் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசன உற்சவம் நாளை (2ம் தேதி) துவங்குகிறது.
மடத்துக்குளம் அருகே கடத்துாரில் நடராஜர் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், ஆருத்ரா தரிசன உற்சவம் நாளை மாலை, 5:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம், சுவாமி புறப்பாடு நிகழ்வுடன் துவங்குகிறது.
வரும் 3ம் தேதி காலை, 9:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், தரிசனம் நடைபெறுகிறது. இதில், கடத்துார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

