/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உலக லயன்ஸ் கிளப் நிர்வாகி ஆய்வு
/
உலக லயன்ஸ் கிளப் நிர்வாகி ஆய்வு
ADDED : ஜன 01, 2026 05:30 AM

பல்லடம்: பல்லடம் அருகே ஆறாக்குளத்திலுள்ள லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளிக்கு உலக லயன்ஸ் கிளப் துணை தலைவர் கென்யா நாட்டை சேர்ந்த டாக்டர் மனோஜ் ஷா, ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, அவரை பள்ளி சேர்மன் மெஜஸ்டிக் கந்தசாமி, வரவேற்றார். லயன்ஸ் மாவட்ட கவர்னர் ராஜசேகர், துணை நிலை கவர்னர் செல்வராஜ், சூரி நந்தகோபால் ஆகியோர் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினர். பள்ளி செயலர் ராம்குமார், பொருளாளர் கருணாநிதி ஆகியோர் பள்ளியின் வருங்கால திட்டம் குறித்து விளக்கினர். பள்ளி அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நடராஜன், அய்யப்பா பாலாஜி மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் விஸ்வநாதன், தினகரன், ராதிகா, மதன கோபால், தனபால், சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

