/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிறந்தது ஆங்கில புத்தாண்டு விடிய விடிய போலீஸ் ரோந்து
/
பிறந்தது ஆங்கில புத்தாண்டு விடிய விடிய போலீஸ் ரோந்து
பிறந்தது ஆங்கில புத்தாண்டு விடிய விடிய போலீஸ் ரோந்து
பிறந்தது ஆங்கில புத்தாண்டு விடிய விடிய போலீஸ் ரோந்து
ADDED : ஜன 01, 2026 05:31 AM

திருப்பூர்: இன்று 2026 புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. இரவில் இளைஞர் பட்டாளங்கள் ஒன்றாக கூடி, நள்ளிரவு 12:00 மணிக்கு புத்தாண்டை வரவேற்க, வாழ்த்து தெரிவிக்க ஆயத்தமாகினர்.
மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், போதையில் மக்களை இடையூறு செய்பவர்களை தடுக்கவும், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தவிர்க்கவும், கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை நேற்று மாலையே போலீசார் துவக்கினர்.
வழக்கமாக சோதனைச்சாவடி, முக்கிய சந்திப்பு, சிக்னல்களில், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் கண்காணிக்கும் போலீசார், நேற்று புதிதாக சில பகுதிகளை தேர்வு செய்து திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று மாலை துவங்கிய கண்காணிப்பு நள்ளிரவு, அதிகாலை வரை நீடித்தது.