/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நானோ' உரம் தெளிப்பு மாணவிகளுக்கு பயிற்சி
/
'நானோ' உரம் தெளிப்பு மாணவிகளுக்கு பயிற்சி
ADDED : ஜன 01, 2026 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்: கோவை வேளாண் பல்கலை கழக தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நான்காம் ஆண்டு இளங்கலை பயிலும் மாணவிகள் பல்லடம் வட்டாரத்தில் தங்கி ஊரக தோட்டக்கலை அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர்.
பொங்கலுார் ஒன்றியம், காட்டூரில் மக்காச்சோள விதை உற்பத்திக்கு நானோ உரங்களை 'ட்ரோன்' வாயிலாக, தெளிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். விவசாயிகள் 'ட்ரோன்' பயன்படுத்துவது குறித்து அறிந்து கொண்டனர். மக்காச்சோள விவசாயி கந்தசாமி, கல்லுாரி மாணவியர் உட்பட பலர் பங்கேற்றனர்.

