/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சைபர் மோசடி: ரூ.17 கோடி இழந்த மக்கள்
/
சைபர் மோசடி: ரூ.17 கோடி இழந்த மக்கள்
ADDED : ஜன 01, 2026 05:29 AM
திருப்பூர்: திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:
கடந்தாண்டு, திருப்பூரில் போதைப்பொருள் வழக்குகளை பொறுத்தவரை, 600 கிலோ கஞ்சா, கஞ்சா சாக்லேட், 230 கிலோ, மெத்தபெட்ட மைன், ஹெராயின் போன்றவை சில கிராம் பறிமுதல் செய்யப்பட்டது. 21 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. குட்கா விற்றது தொடர்பாக, 700 வழக்குகள் பதியப்பட்டு, 900 பேர் கைது செய்யப்பட்டு, 4,300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆயிரத்து, 100 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.
சைபர் கிரைம் தொடர்பான குற்ற வழக்கு அதிகரித்துள்ளது. 2,900 சி.எஸ்.ஆர். போடப்பட்டதில், 17 கோடி ரூபாயை மக்கள் இழந்துள்ளனர். ஏழு கோடி ரூபாய் முடக்கப்பட்டு, 2 கோடி ரூபாய் சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி கொடுக்கப்பட் டுள்ளது. நேரில் புகார் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனில் அளிக்கலாம். முறைகேடாக தங்கியிருந்த வெளிநாட்டினர், 127 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், 109 வங்கதேசத்தினர், எட்டு நைஜீரியர்கள் அடங்குவர்.
மூன்று வழக்கில், வங்கதேசத்தினர், 12 பேருக்கு தண்டனை பெறப்பட்டது. தண்டனை நிறைவு பெற்ற பின், அவர்களை நாடு கடத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

