/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆருத்ரா தரிசன விழா 25ல் துவங்குகிறது
/
ஆருத்ரா தரிசன விழா 25ல் துவங்குகிறது
ADDED : டிச 23, 2025 07:03 AM
உடுமலை: உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா வரும், 25ம் தேதி மாணிக்கவாசகர் சுவாமிக்கு அபிேஷக ஆராதனையுடன் துவங்குகிறது.
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், அருள்பாலிக்கும், சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் சுவாமிக்கு, வரும் 25ம் தேதி ஆருத்ரா தரிசன விழா துவங்குகிறது. அன்று, இரவு, 7:00 மணிக்கு மாணிக்கவாசகர் சுவாமிக்கு அபிேஷக, ஆராதனை நடக்கிறது.
வரும், ஜன., 1ம் தேதி வரை நாள்தோறும் இந்த அபிேஷக, ஆராதனை நடைபெறும். வரும் ஜன., 2ல், காலை, 10:00 மணிக்கு, சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வர சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
அன்று பகல், 1:00 மணிக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது. வரும் 3ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு அபிேஷகம், அலங்காரம், ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. காலை, 10:30 மணிக்கு சுவாமி திருவீதியுலா நடக்கிறது.
வரும் ஜன., 4ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, மகா அபிேஷகம், அலங்காரம், மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது.

