/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மன வளக்கலை மன்றங்களில் தியானத்தில் மூழ்கிய மக்கள்
/
மன வளக்கலை மன்றங்களில் தியானத்தில் மூழ்கிய மக்கள்
மன வளக்கலை மன்றங்களில் தியானத்தில் மூழ்கிய மக்கள்
மன வளக்கலை மன்றங்களில் தியானத்தில் மூழ்கிய மக்கள்
ADDED : டிச 23, 2025 07:04 AM

திருப்பூர் : உலக தியான தினத்தையொட்டி, உலக சேவா சங்கம் திருப்பூர் மண்டலம் சார்பில், அனைத்து மனவளக்கலை மன்றங்கள் மற்றும் அறக்கட்டளைகளில், தியான பயிற்சி நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அமைதியான சூழலில் குழுத் தியானம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் ஆழ்ந்த மன அமைதியையும் ஆன்மிக எழுச்சியையும் அனுபவித்ததாக தெரிவித்தனர். மனித நேயம், அன்பு, பொறுமை மற்றும் சமாதானம் போன்ற உயரிய பண்புகளை வளர்க்க தியானம் துணைபுரிகிறது; தியானத்தை தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
---
15, வேலம்பாளையம் அறிவுத்திருக்கோவிலில், சிறப்பு தியானம் நடந்தது.