/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முகவரி கேட்பது போல் நடித்து தாலிக்கொடியை பறித்த ஆசாமி
/
முகவரி கேட்பது போல் நடித்து தாலிக்கொடியை பறித்த ஆசாமி
முகவரி கேட்பது போல் நடித்து தாலிக்கொடியை பறித்த ஆசாமி
முகவரி கேட்பது போல் நடித்து தாலிக்கொடியை பறித்த ஆசாமி
UPDATED : மார் 06, 2024 02:22 AM
ADDED : மார் 06, 2024 12:09 AM
அவிநாசி;திருமுருகன்பூண்டியில் முகவரி கேட்பது போல் நடித்து, மூதாட்டி அணிந்திருந்த, தாலிக்கொடியை பறித்த சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருமுருகன்பூண்டி நகராட்சி, ஆர்.ஜி., கார்டன் அருகில் உள்ள ராகவேந்திரா நகரில் வசிப்பவர் ரங்கசாமி. ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவரது மனைவி சுசீலா, 68. நேற்று காலை வீட்டின் முன்பாக உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் டூவீலரில் வந்து ஏதோ இடத்தின் பெயரை சொல்லி, முகவரி கேட்டார். அதற்கு 'தனக்கு தெரியாது,' என்று சுசீலா கூறவும், 'சரி பரவாயில்லை. குடிக்க தண்ணீர் கொடுங்க...' என கேட்டு அருகில் வந்துள்ளார்.
உடனே, அவர் வீட்டுக்குள் சென்று தண்ணீர் எடுத்து கொண்டு வந்து தரவும், அந்நபர், சுசீலா அணிந்திருந்த இருந்த ஐந்தரை பவுன் தாலிக்கொடியை பறித்து கொண்டு டூவீலரில் தப்பினார்.
இது குறித்து புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்து திருமுருகன்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

