/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அசோக் லேலண்ட் 'அம்மன் ஆட்டோ' திருப்பூரில் திறப்பு விழா
/
அசோக் லேலண்ட் 'அம்மன் ஆட்டோ' திருப்பூரில் திறப்பு விழா
அசோக் லேலண்ட் 'அம்மன் ஆட்டோ' திருப்பூரில் திறப்பு விழா
அசோக் லேலண்ட் 'அம்மன் ஆட்டோ' திருப்பூரில் திறப்பு விழா
ADDED : பிப் 17, 2024 01:38 AM

திருப்பூர்:அசோக் லேலண்ட் வாகனங்கள் விற்பனை, சர்வீஸ் மற்றும் உதிரிபாக விற்பனையில் கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு அம்மன் ஆட்டோ நிறுவனம் செயல்படுகிறது.
திருப்பூர் - பல்லடம் ரோடு, டி.கே.டி., மில்ஸ் பஸ் ஸ்டாப் பகுதியில் அம்மன் ஆட்டோ நிறுவனத்தின் இலகு ரக கமர்சியல் வாகனங்களுக்கான பிரம்மாண்ட ேஷாரூம் திறப்பு விழா நேற்று நடந்தது.
ேஷாரூமை, அசோக் லேலண்ட் நிறுவன இலகு ரக கமர்சியல் வாகன விற்பனை தென் மண்டல தலைவர் ஸ்ரீவர்தன் ரித்துராஜ் திறந்து வைத்தார். தமிழகம் மற்றும் கேரள மண்டல மேலாளர் ஸ்ரீராம், அம் மன் ஆட்டோ முதன்மை செயல் அலுவலர் மாதவன் குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இங்கு அசோக் லேலண்ட் நிறுவனத்தின், தோஸ்த், படா தோஸ்த், பார்ட்னர், பள்ளி வாகனங்கள், நிறுவன ஊழியர்கள் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
வாடிக்கையாளர் தேவைக்கேற்ப இந்த மாடல் வாகனங்களில் தேவையான மாற்றங்கள் இங்கு செய்து தரப்படும். ஜவுளி நகரமான திருப்பூர் தொழில் நிறுவனங்களின் வாகனங்கள் தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்யும் விதமான சேவைகள் இங்கு வழங்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு 90470 85296 மற்றும் 90470 29270 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.