/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அஷ்ட மாரி ஹோம பூஜை: திரளான பக்தர்கள் வழிபாடு
/
அஷ்ட மாரி ஹோம பூஜை: திரளான பக்தர்கள் வழிபாடு
ADDED : மார் 03, 2026 06:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், மாசி பவுர்ணமியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.
உடுமலை மாரியம்மன் கோவிலில், மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, அஷ்ட மாரி ஹோம பூஜைகள் நேற்று நடந்தது.
மாலை, 6:00 மணிக்கு, மங்கள இசையுடன், யாக சாலை பூஜைகள் துவங்கி, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், ஸ்ரீ அஷ்டமாரி கலச ஆவாஹனம், அக்னிகார்யம், அஷ்ட திரவிய ஹோமம், நிறை வேள்வி, கடம் புறப்பாடு, மகா அபிேஷகம், மகா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன.
இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.

