/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரமாண்டம்! அதிநவீன மெஷின்களுடன், 'நிட்டெக் - 2026' கண்காட்சி பின்னலாடை துறையின் வளர்ச்சிக்கான ஒரு நல்வாய்ப்பு
/
பிரமாண்டம்! அதிநவீன மெஷின்களுடன், 'நிட்டெக் - 2026' கண்காட்சி பின்னலாடை துறையின் வளர்ச்சிக்கான ஒரு நல்வாய்ப்பு
பிரமாண்டம்! அதிநவீன மெஷின்களுடன், 'நிட்டெக் - 2026' கண்காட்சி பின்னலாடை துறையின் வளர்ச்சிக்கான ஒரு நல்வாய்ப்பு
பிரமாண்டம்! அதிநவீன மெஷின்களுடன், 'நிட்டெக் - 2026' கண்காட்சி பின்னலாடை துறையின் வளர்ச்சிக்கான ஒரு நல்வாய்ப்பு
UPDATED : மார் 04, 2026 05:10 AM
ADDED : மார் 04, 2026 05:06 AM

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கான, 'நிட்டெக் -2026', திருமுருகன்பூண்டி - பூலுவபட்டி ரிங் ரோடு, 'ைஹடெக் திருப்பூர்' பிரமாண்ட கண்காட்சி வளாகத்தில், வரும், 6ம் துவங்கி, நான்கு நாட்கள் நடக்கிறது.
'ஹை டெக் இன்டர்நேஷனல் டிரேடு பேர்' நிறுவனம் சார்பில், ஜவுளி தொழில்துறையினருக்கான தொழில்நுட்ப கண்காட்சி நடத்தப்படுகிறது. பின்னலாடை தொழில்துறைக்காக, 'நிட்டெக் -2026' கண்காட்சி, திருப்பூரில் நடத்தப்படுகிறது. அவ்வரிசையில், 18வது, 'நிட் டெக்' கண்காட்சி வரும், 6ம் தேதி துவங்குகிறது. இதுவரை இல்லாத வகையில், மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்துறை சார்பில், கண்காட்சியில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு, மானியம் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து 'ஹைடெக் இன்டர்நேஷனல் டிரேடு பேர் நிறுவனத்தின் சேர்மன் ராயப்பன் கூறியதாவது:
இந்தியாவிலேயே பின்னலாடைத் துறைக்கான கண்காட்சியில், எம்.எஸ்.எம்.இ., துறையின், 80 சதவீத மானியத்துடன், எம்.எஸ்.எம்.இ., சான்று பெற்ற நிறுவனங்கள் ஸ்டால் அமைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ைஹடெக் இன்டர்நேஷனல் டிரேடு பேர் நிறுவனம், அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
அரசு மானியத்துடன் குறைந்த செலவிலேயே, இக்கண்காட்சியில் பங்கேற்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. பெண் தொழில் முனைவோர்களும், புதிய தொழில் முனைவோர்களும், ன்னலாடை சார்ந்த அனைத்து உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்களும் பங்கேற்கின்றனர். பெரும்பாலான நிறுவனங்கள், மத்திய அரசின், 80 சதவீத மானியத்துடன் ஸ்டால் அமைக்கின்றன. மொத்தம், 2 லட்சம் சதுர அடியில் கண்காட்சி அரங்குகள், முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன.
ஊசி முதல் பேக்கிங் வரை உள்ள அனைத்து விதமான நவீன இயந்திரங்களும், கண்காட்சியில், இயங்கும் நிலையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியை வேகப்படுத்த, அதிக முனைப்பு காட்டி வருகின்றனர். அதற்கான இயந்திரங்களும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.
உற்பத்தி செலவு வெகுவாக குறையும்
தயாரிப்பு செலவுகளை குறைக்கும் வகையில், பசுமை சார் உற்பத்திக்கான இயந்திரங்கள் பார்வைக்கு வைக்கப்படும். அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த தயாராகி விட்டன. ஜெர்மன், இத்தாலி, பிரான்ஸ், கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் சீனா உள்ளிட்ட நாட்டு நிறுவனங்களும் வருகின்றன. அது மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு நிறுவனங்களும், 'டிஜிட்டல் பிரின்டிங்' உள்ளிட்ட இயங்கு நிலை இயந்திரங்களுடன் கண்காட்சியில் பங்கேற்கின்றனர்.
ஒரு லட்சம் கோடி ரூபாய் வர்த்தகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் திருப்பூர் பின்னலாடைத் தொழிலுக்கும், வளர்ச்சிக்கும் எங்கள் 'நிட் டெக்' கண்காட்சி உறுதுணையாக இருந்து வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதுவரை இல்லாத வகையில், மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்துறை சார்பில், கண்காட்சியில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு, மானியம் வழங்கப்பட உள்ளது

