ADDED : டிச 06, 2024 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், குமரன் ரோடு, பென்னி காம்பவுண்ட் ரோட்டில் அஸ்வின் சி.ஏ., அகாடமி நேற்று திறக்கப்பட்டது.
திருப்பூர், பென்னி காம்பவுண்ட் ரோட்டில் உள்ள ஜெ.பி., டவர் முதல் தளத்தில் அஸ்வின் சி.ஏ., அகாடமி என்ற புதிய ஆடிட்டிங் கல்வியியல் கல்லுாரி யின் திறப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருப்பூர் பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையம் ஆன்மீக சகோதரி ரேணுகா குத்து விளக்கு ஏற்றி வைத்தார். திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க தலைவர் மோகனசுந்தரம் இரண்டு வகுப்பறைகளை திறந்து வைத்தார். அஸ்வின் சி.ஏ., அகாடமி நிர்வாக இயக்குனர் பிரகாஷ், தாளாளர் காயத்ரி ஆகியோர் வரவேற்றனர். ஆடிட்டர்கள், மாணவ, மாணவியர் உட்பட பலர் பங்கேற்றனர்.