ADDED : டிச 09, 2024 11:43 PM
தேசியக் கவிஞன் பாரதி; கவிதை எழுதுபவரை, கவிஞன் என்போம். ஆனால், கவிதையையே வாழ்க்கையாகவும், வாழ்க்கையையே கவிதையாகவும் படைத்தவன் இந்த மகாகவிஞன். ஒளிபடைத்த கண், உறுதிகொண்ட நெஞ்சு, தெளிவு பெற்ற மதி என பாரதி வரவேற்ற இளைய பாரதத்தின் தேவை, நாடு விடுதலை பெற்றதோடு முடிந்துவிடவில்லை. இன்றும் தொடர்கிறது.
பாரதியாரின் பிறந்தநாள் விழா நாளை (டிச., 11) கொண்டாடப்படுகிறது. அவன் படைத்த 'புதிய ஆத்தி சூடி'யில் இடம்பெற்ற அடிகள் சிறியவை; ஆற்றலோ மகோன்னதமானவை. இதில், 'அ'கரம் முதல் 'ஒள'காரம் வரையிலான எழுத்துக்களுடன் துவங்கும் 'புதிய ஆத்தி சூடி'களைத் தலைப்புகளாகக் கொண்டு, பொருத்தமான செய்திகள் இன்றைய 'தினமலர்' இதழ் 'திருப்பூர்' இணைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் செய்திகள் சிலவற்றின் தலைப்புகளாக பாரதியின் வரிகள் இடம்பெற்றுள்ளன.
'பெரிதினும் பெரிது கேள்' என்கிறான் பாரதி; தேசம் முன்னேற நம் கனவு மட்டுமல்ல... உழைப்பும் பெரிதாக வேண்டும்; அறிவும் விசாலமாக வேண்டும்.

