ADDED : மார் 12, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: லோக்சபா தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் கருத்து கேட்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
கட்டடங்களின் தன்மை, பள்ளி வளாகம் என்பதால், வாக்குசாவடி மையம் உறுதி செய்யப்பட்ட பின், புதியதாக வாக்குசாவடி மையத்தில் நடந்து வரும் பணிகள், அந்த கட்டடங்களுக்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசித்தனர்.

