ADDED : மார் 03, 2024 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மா.கம்யூ., கட்சியின் மத்திய குழு முடிவுகள் விளக்க பேரவை கூட்டம் மற்றும் கட்சி நிதியளிப்பு நிகழ்ச்சி பல்லடம் அருகே நேற்று நடந்தது.
பொங்கலுார் ஒன்றிய செயலாளர் பாலன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் பவித்ரா தேவி வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமார் பேசினார். மாநில குழு உறுப்பினர் காமராஜ், கட்சி நிதியை நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் சம்பத், அர்ஜுனன், சிவகுமார், துரைமுருகன், சிவக்குமார், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர். ஒன்றிய குழு உறுப்பினர் சிவசாமி நன்றி கூறினார்.

