ADDED : ஜூலை 14, 2025 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; தமிழகம் முழுவதும் டி.எஸ்.பி.,க்கள் நேற்று முன்தினம் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் கொங்கு நகர் உதவி கமிஷனர் வசந்தராஜ், பெருந்துறைக்கும், கோவை காட்டூர் உதவி கமிஷனர் கணேஷ், கொங்கு நகருக்கும், திருப்பூர் சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் செந்தில்குமார்,
திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்குக்கும், மதுரை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை டி.எஸ்.பி., சரவண ரவி, திருப்பூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். காங்கயம் டி.எஸ்.பி., மாயவன், சென்னை சைபர் கிரைம் பிரிவு டி.எஸ்.பி.,யாகவும், திருச்சி போதை பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., பாஸ்கர், திருப்பூர் மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.