/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோள்கள் அணிவகுக்கும் வானியல் நிகழ்வு
/
கோள்கள் அணிவகுக்கும் வானியல் நிகழ்வு
ADDED : ஜன 20, 2025 10:58 PM
உடுமலை; வானில் நிகழும் ஆறு கோள்களின் அணிவகுப்பு நிகழ்வு வரும் 25ம் தேதி நடைபெறுகிறது.
இம்மாதம் 25ம்தேதி வானில் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ், புதன் உள்ளிட்ட கோள்கள் ஆறும்,ஒரே நேரத்தில் சீரமைப்புடன் அணிவகுக்க உள்ளது. இந்த நிகழ்வு அன்று மாலையில் நடக்கிறது.
இதில் வெறும் கண்களால், சில கோள்களை மட்டுமே காண முடிகிறது. இதனால் தொலைநோக்கி வழியாக அனைத்து கோள்களையும் காண்பதற்கு உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
மைவாடி பிரிவில் உள்ள விவேகானந்தா வித்யாலயம் பள்ளியில், வரும் 25ம் தேதி மாலை, 6:00 மணி முதல் 9:00 மணி வரை இந்த நிகழ்வை காணலாம். பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அனைவரும் இந்நிகழ்வை காண்பதோடு, அறிவியல் மற்றும் விண்வெளி தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்கும், இலவசமாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வு குறித்த தகவல்களுக்கு, 87782 01926 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.