/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளியில் வானியல் நிகழ்ச்சி
/
அரசு பள்ளியில் வானியல் நிகழ்ச்சி
ADDED : பிப் 18, 2025 09:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை ; உடுமலை அருகே, ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், வான்நோக்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில், இரவு வான்நோக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்பள்ளி மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர், பள்ளிக்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதியினர், தொலைநோக்கி வாயிலாக, வானில் உள்ள கோள்களின் அணிவகுப்பை கண்டு மகிழ்ந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல் செய்திருந்தார்.

