/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் உபகரணம் சேதம்: தடுப்பது எப்படி?
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் உபகரணம் சேதம்: தடுப்பது எப்படி?
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் உபகரணம் சேதம்: தடுப்பது எப்படி?
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் உபகரணம் சேதம்: தடுப்பது எப்படி?
ADDED : டிச 14, 2025 07:33 AM
'அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தில் குழாய் உள்ளிட்ட உபகரணங்கள் சேதமடைவதால், நீர் செறிவூட்டும் பணியில் இடையூறு தொடர்கிறது. எனவே, அந்தந்த பகுதியில் உள்ள அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்ட போராட்டக் குழுவினர், அத்திக்கடவு திட்ட பாதுகாப்பு குழுவினராக மாற வேண்டும்' என, நீர்வளத்துறை அதிகாரிகள் யோசனை தெரிவிக்கின்றனர்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள, 1,047 குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டும் பணி நடந்து வருகிறது. இதற்கென, 1,045 கி.மீ., நீளம் குழாய் பதிக்கப்பட்டுள்ளது; திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள குளம், குட்டைகளில் சோலார் தொழில்நுட்பத்தில் இயங்கும், 'தானியங்கி சென்சார் சிஸ்டம்' உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. திட்டத்தில் இணைக்கப்பட்டு பல குளம், குட்டைகளுக்கு சரிவர நீர் செறிவூட்டப்படுவதில்லை என்ற புகார் பரவலாக இருந்து வருகிறது.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'' குளம், குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள குழாய் உள்ளிட்ட உபகரணங்களை சிலர் சேதப்படுத்தியும், திருடியும் சென்று விடுகின்றனர். நீர் வினியோகத்தில் தடை ஏற்படுகிறது. ஒவ்வொரு குளம், குட்டைகளையும் கண்காணிப்பது என்பது, நடைமுறையில் சிரமம். எனவே, அந்தந்த பகுதியில் உள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழுவினர், தங்கள் பகுதியில் உள்ள அத்திக்கடவு திட்ட குளம், குட்டைகள், குழாய் உள்ளிட்ட கட்டமைப்புகளை கண்காணித்து, அதை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்,'' என்றனர்.

