/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடுப்பூசி மருந்து பாதுகாப்பில் கவனம்
/
தடுப்பூசி மருந்து பாதுகாப்பில் கவனம்
ADDED : டிச 14, 2025 07:32 AM
சு காதாரத்துறை சார்பில் வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியத்துக்காக சீரான இடைவெளியில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசி மருந்துகள் இருப்பு வைக்கப்படுகிறது.
பயன்பாடு, உபயோகத்துக்கு ஏற்ப, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில் இருந்து, மாவட்ட மருந்து கிடங்குகளுக்கு இவை அனுப்பப்படுகின்றன.
பெரும்பாலான மாவட்டங்களில் மழை குறைந்துள்ளதால், குளிர் அதிகமாகியுள்ளது; ஒருபுறம் வெயில் சுளீரென வாட்டுகிறது.
வானிலை மாற்றத்தை கருத்தில் கொண்ட பொது சுகாதாரத்துறை, மாவட்ட அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மருந்துகளை பாதுகாப்பதில் கவனமுடன் இருக்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தடுப்பூசி மருந்துகளின் குளிர்நிலை குறையும் போது அவற்றின் செயல்திறன் குறையவும் வாய்ப்புள்ளது. வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், சில இடங்களில் அவ்வப்போது மின்தடையும் ஏற்படுவதால், இருப்பு வைக்கப்பட்டுள்ள இடங்களில் கவனமுடன் ஜெனரேட்டர்களை இயக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.

