தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அத்திக்கடவு – அவிநாசி திட்டம் 2.0 போராட்டக்குழுவினர் எதிர்பார்ப்பு

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் 2.0 போராட்டக்குழுவினர் எதிர்பார்ப்பு

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் 2.0 போராட்டக்குழுவினர் எதிர்பார்ப்பு


UPDATED : நவ 05, 2026 11:55 PM

ADDED : நவ 04, 2026 08:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 11:55 PM ADDED : நவ 04, 2026 08:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருமாநல்லுார்: அத்திக்கடவு – அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் மூலம் திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன், விவசாயமும் அதிகரித்துள்ளது. இத்திட்டத்தால் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், 50 லட்சம் மக்கள் பயனடைந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், 1,400 குளம், குட்டைகள் இத்திட்டத்தில் விடுபட்டுள்ளன. இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைவாக இருப்பதால், அவற்றையும் திட்டத்தில் இணைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பெருந்துறையில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதல்வர் விஜயை, பெருமாநல்லுார் அருகே சந்தித்த அத்திக்கடவு – அவிநாசி திட்டப் போராட்டக் குழு கூட்டமைப்பினர், கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து கூட்டமைப்பினர் கூறியதாவது:

மனுவைப் பெற்றுக்கொண்ட முதல்வர், திட்டம் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார். விடுபட்ட குளம், குட்டைகளைத் திட்டத்தில் இணைப்பதுடன், ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள குளம், குட்டைகளுக்கும் தடையின்றி தண்ணீர் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகளையும் சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தினோம்.

மேலும், பாண்டியாறு நீர்ப்பிடிப்புப் பகுதியில் கிடைக்கும் நீரைச் சேமித்து, பவானி ஆற்றுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம். கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வர் தெளிவாகக் கேட்டறிந்தார். அவற்றை அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us