/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்திக்கடவு திட்ட போராட்டக்குழு மார்ச் 1ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ADDED : பிப் 20, 2024 05:33 AM

அவிநாசி: அவிநாசியிலுள்ள கொங்கு கரையரங்கில் நேற்று அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. போராட்டக் குழுவினர் கூறியதாவது:
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு போராட்டங்களுக்கு பின், திட்டத்தை அரசு செயல்படுத்த துவங்கியது. இத்திட்டத்தில் பெருந்துறை முதல் காரமடை வரை 1045 குளம் - குட்டைகள் இணைக்கப்பட்டு, குழாய்கள் பதித்து சோதனை முறையில் வெற்றி அடைந்துள்ளது.
ஆனால், தமிழக அரசு இத்திட்டத்தை முழுமையாக முடிவிற்கு கொண்டு வராமல் 98 சதவீதம், 99 சதவீதம் முடிந்ததாக தொடர்ந்து அறிவித்துக் கொண்டே உள்ளது. பணிகள் முடிந்து இரண்டரை ஆண்டுகள் கடந்தும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.
மேலும், திட்டத்தில், 1,400 குட்டைகள் விடுபட்டுள்ளது. அந்தக் குட்டைகளை இத்திட்டத்தில் போர்க்கால அடிப்படையில் உடனடியாக சேர்க்க வேண்டும். இதனை தமிழக அரசின் கவனத்தில் கொண்டு செல்லும் வகையில் அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் மார்ச் 1ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.