/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடகள, குழு விளையாட்டு போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
/
தடகள, குழு விளையாட்டு போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
தடகள, குழு விளையாட்டு போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
தடகள, குழு விளையாட்டு போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
ADDED : நவ 09, 2024 12:35 AM

திருப்பூர் ; மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், முத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட குழு மற்றும் தடகள போட்டி நடத்தப்பட்டது. குறுமைய அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்டம் முழுதும் இருந்தும் பங்கேற்றனர். இப்போட்டியில், திருப்பூர் சென்சுரி பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று, வெற்றி பெற்றுள்ளனர்.
இப்பள்ளி மாணவர் கால்பந்து அணி முதலிடம், மேஜைப்பந்து ஒற்றையர் பிரிவில் முகமது ஹபிஸ் இரண்டாமிடம், 400 மீ., ஓட்டத்தில், மாணவர் யத்தின் இரண்டாமிடம்; இம்மாணவர், மும்முனை தத்தித் தாண்டும் போட்டியில் மூன்றாமிடம். மாணவியர் ஹாக்கி இரண்டாமிடம், நீளம் தாண்டுதலில் லித்தன்யா இரண்டாமிடம்; இம்மாணவி மும்முனை தத்தித் தாண்டுதல் மற்றும், 100 மீ., ஓட்டத்தில், மூன்றாமிடம். மாணவி அஸ்மிதா, 100 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் முதலிடம், இம்மாணவி உயரம் தாண்டுதலில் மூன்றாமிடம் பெற்றார்.
மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு போட்டியில், வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் உடற்கல்வி பயிற்சியாளர்கள் பாலசுப்ரமணியன், குணசீலன், மாசாணம், கார்த்திக்பிரசாத் ஆகியோரை பள்ளியின் தாளாளர் சக்திதேவி, பள்ளி முதல்வர் ெஹப்சிபாபால் உள்ளிட்டோர் பாராட்டினர்.