/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குடி'மகன்களின் 'அட்ராசிட்டி' சுரங்க நடைபாதை அடைப்பு
/
'குடி'மகன்களின் 'அட்ராசிட்டி' சுரங்க நடைபாதை அடைப்பு
'குடி'மகன்களின் 'அட்ராசிட்டி' சுரங்க நடைபாதை அடைப்பு
'குடி'மகன்களின் 'அட்ராசிட்டி' சுரங்க நடைபாதை அடைப்பு
ADDED : பிப் 05, 2025 12:31 AM

திருப்பூர்; திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் சுரங்கபாலம் நடைபாதையில் குடிமகன்களின் 'அட்ராசிட்டி' காரணமாக பாலத்தை அடைத்து வைத்துள்ளனர்.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவை, ஈரோடு, சேலம், பொள்ளாச்சி, உடுமலை, பழநி உள்ளிட்ட வெளியூர்களுக்கும் மற்றும் அவிநாசி, காங்கயம், பெருமாநல்லுார் பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தினமும், பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால், எந்த நேரமும் பஸ் ஸ்டாண்ட் வளாகம் பரபரப்பாக காணப்படும். 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பஸ் ஸ்டாண்ட் புனரமைக்கப்பட்ட போது, பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இருந்து, வெளியே உள்ள சுரங்கப் பாலத்தை இணைக்கும் வகையில் ஒரு சுரங்கப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், போதை ஆசாமிகள் பலர் சுரங்கப் பாலம் நடைபாதையில் உறங்குவது, தனியாக செல்லும் பயணிகளிடம் வழிப்பறி, பெண்களை கிண்டல் செய்வது போன்ற பல்வேறு 'அட்ராசிட்டி'களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், சுரங்கப்பாலத்தை இணைக்கும் நடைபாதையை, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் அடைத்து வைத்துள்ளனர். எனவே, பயணிகள் மீண்டும் பயன்படுத்தும் வகையில், இந்த சுரங்கப் பாலத்தை இணைக் கும் நடைபாதையை திறந்து விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.