/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹிந்துக்கள் மீது தாக்குதல்; நாளை ஆர்ப்பாட்டம்
/
ஹிந்துக்கள் மீது தாக்குதல்; நாளை ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 03, 2024 07:09 AM

திருப்பூர்; வங்க தேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், அதைத் தடுக்க வலியுறுத்தியும் திருப்பூரில் நாளை ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
திருப்பூரில் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், ஆர்.எஸ்.எஸ்., திருப்பூர் கோட்ட தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி ஆகியோர் நேற்று கூறியதாவது: வங்க தேச ஹிந்துக்கள் உரிமை மீட்பு குழு சார்பில் நாளை (4ம் தேதி), நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், மாநகராட்சி சந்திப்பு பகுதியில் காலை 11:00 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். பல்வேறு ஹிந்து அமைப்புகள், சமய பெரியவர்கள், ஆன்மீக ஆர்வலர்கள், ஹிந்துக்கள் மீது அக்கறை கொண்டோர் பங்கேற்கவுள்ளனர்.
வங்க தேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு, ஹிந்துக்கள் காப்பாற்ற குரல் தர வேண்டும். பங்கேற்க விரும்பும் அமைப்பினர், இதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், 98422 62650 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.