/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில் மறியல் முயற்சி; 45 விவசாயிகள் கைது
/
ரயில் மறியல் முயற்சி; 45 விவசாயிகள் கைது
ADDED : டிச 16, 2024 10:52 PM

திருப்பூர்; விவசாய விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன்பு ரயில் மறியல் போராட்டம் நடந்தது.மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் ஈஸ்வரன், சிறப்பு அழைப்பாளராக பாலு குட்டி, கொள்கை பரப்பு செயலாளர் ராசு, மாநில அவை தலைவர் பாலசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து கோரிக்கை குறித்து வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பிய படி, ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைய முயன்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 45 பேரை கைது செய்தனர்.