/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆதீனத்தை வசப்படுத்த முயற்சி; ஹிந்து முன்னணி கண்டனம்
/
ஆதீனத்தை வசப்படுத்த முயற்சி; ஹிந்து முன்னணி கண்டனம்
ஆதீனத்தை வசப்படுத்த முயற்சி; ஹிந்து முன்னணி கண்டனம்
ஆதீனத்தை வசப்படுத்த முயற்சி; ஹிந்து முன்னணி கண்டனம்
ADDED : நவ 13, 2024 11:23 PM

திருப்பூர்; 'ஆதீனத்தை, தமிழக அரசு தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை ஹிந்து முன்னணி கடுமையாக எதிர்க்கிறது. இப்பிரச்னையில், மற்ற பாரம்பரிய ஆதீனங்கள், தீர்வுக்கு வழிகாட்ட வேண்டும' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார்.
திருப்பூரில் அவர் நேற்று கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்டம், சூரியனார்கோவில், 28வது ஆதீனம் மகாலிங்க சுவாமிகள், முறைப்படி திருமணம் செய்யாமல், சட்ட ரீதியான பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். இதற்கு முன், திருமணமானவர்கள் ஆதீனமாக இருந்ததாக தவறான கருத்தை கூறினார். திருமணமானவர், குடும்ப உறவை துறந்து, துறவியாக மாறி, அந்த ஆதீன தலைவராக பொறுப்பேற்று உள்ளனர். திருமணம் செய்து, இல்லறத்தில் இருந்து, யாரும் அதில் செயல்படவில்லை.
ஆதீனத்தில் பிரச்னை என்றால் அரசோ, அறநிலையத்துறையோ தலையிடுவது கண்டிக்கத் தக்கது. எப்படி கிறிஸ்துவ, முஸ்லிம் மதங்களை சார்ந்த சர்ச், மசூதிகளில் பிரச்னை ஏற்படும் போது, அதில் அரசு அதிகாரிகள் தலையிடுவது இல்லையோ, அதுபோல பாரம்பரியமான ஹிந்து சமய முறைகளிலும் அரசு தலையிடக் கூடாது.
ஆதீனத்தை, தமிழக அரசு தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை ஹிந்து முன்னணி கடுமையாக எதிர்க்கிறது. இப்பிரச்னையில், மற்ற பாரம்பரிய ஆதீனங்கள், தீர்வுக்கு வழிகாட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

