/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில் இடம் ஆக்கிரமிக்க முயற்சி; பா.ஜ., புகார்
/
கோவில் இடம் ஆக்கிரமிக்க முயற்சி; பா.ஜ., புகார்
ADDED : ஜன 01, 2024 12:22 AM
அனுப்பர்பாளையம்:திருப்பூர் வடக்கு ஒன்றிய பா.ஜ மண்டல தலைவர் ஜெகதீசன், ஒன்றிய பொது செயலாளர் குமார் ஆகியோர் கலெக்டரை சந்தித்து அளித்த மனு:
பெருமாநல்லுார் ஊராட்சி, சிவன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள சாவடியில் விநாயகர் கோவில் மற்றும் அதனை சுற்றி காலி இடங்கள் உள்ளன. அங்குள்ள காலி இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் தி.மு.க.,வினர் சிமென்ட் சீட் அமைக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.
விநாயகர் கோவிலுக்கு முன்புறம் உள்ள இடத்தில் 'பிரீசர் பாக்ஸ்' கொண்டு வந்து வைத்துள்ளனர். அங்கு மின் இணைப்பு பெறுவதற்கான 'பில்லர்' கட்டி உள்ளனர். கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து வருகின்றனர்.
கோவில் இட ஆக்கிரமிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.