/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலை அருகே ஆசிரியரை கொல்ல முயற்சி; போதை ஆசாமிகளுக்கு வலை
/
உடுமலை அருகே ஆசிரியரை கொல்ல முயற்சி; போதை ஆசாமிகளுக்கு வலை
உடுமலை அருகே ஆசிரியரை கொல்ல முயற்சி; போதை ஆசாமிகளுக்கு வலை
உடுமலை அருகே ஆசிரியரை கொல்ல முயற்சி; போதை ஆசாமிகளுக்கு வலை
ADDED : ஜூன் 26, 2025 12:28 AM

உடுமலை; உடுமலை அருகே, அரசு பள்ளி ஆசிரியர் மீது, மது போதையில் இருந்த வாலிபர்கள் பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருபவர் உடுமலை யு.எஸ்.எஸ்., லே அவுட்டை சேர்ந்த சையது முகமது குலாம் தஸ்தகீர், 45.
நேற்று மாலை, 5:00 மணிக்கு பள்ளி காம்பவுண்டு சுவர் பகுதியில், 4 வாலிபர்கள் மது அருந்திக்கொண்டிருந்தனர். அவர்களை பார்த்த ஆசிரியர், இது பள்ளி வளாகம், பாட்டில்களை உள்ளே வீசுவதால் மாணவர்கள் பாதிக்கின்றனர்.
இங்கு மது அருந்த வேண்டாம் என எச்சரித்து அவர்களை அனுப்பியுள்ளார். பின்னர் மாலை, 6:00 மணிக்கு பள்ளி தலைமையாசிரியர் அறை அருகே, சையது முகமது குலாம் தஸ்தகீர், அமர்ந்திருந்தார்.
அப்போது, மது போதையில் வந்த 4 பேர், ஆசிரியரின் கை, கால்களை பிடித்து, கடுமையாக தாக்கியதோடு, தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி, தீ வைக்க முயற்சித்தனர். ஆசிரியரின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்ட நிலையில், 4 பேரும் தப்பியோடினர்.
பலத்த காயங்களுடன் இருந்த ஆசிரியரை மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் காரத்தொழுவு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.