/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி சர்க்கரை ஆலையை அபகரிக்க முயற்சி; நவீனப்படுத்த நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பு; கிருஷ்ணசாமி
/
அமராவதி சர்க்கரை ஆலையை அபகரிக்க முயற்சி; நவீனப்படுத்த நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பு; கிருஷ்ணசாமி
அமராவதி சர்க்கரை ஆலையை அபகரிக்க முயற்சி; நவீனப்படுத்த நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பு; கிருஷ்ணசாமி
அமராவதி சர்க்கரை ஆலையை அபகரிக்க முயற்சி; நவீனப்படுத்த நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பு; கிருஷ்ணசாமி
ADDED : மார் 27, 2025 06:33 AM

உடுமலை : ''அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை ஆளும்கட்சியினர் அபகரிக்கும் நோக்கில், நவீனப்படுத்த நிதி ஒதுக்காமல் மூடி வைத்துள்ளனர்,'' என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில், 69 சதவீத இடஒதுக்கீடு உள்ள நிலையில், 76 ஜாதிகளுக்கு, 18 சதவீதம் ஒதுக்கீடு இருந்தது. இதில், எந்த கணக்கீடும் இல்லாமல், அருந்ததியர்களுக்கு, 3 சதவீதம் வழங்கியதால், மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த சமூக அநீதியை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும்.
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில், 6 தலைமுறைகளாக, 99 ஆண்டுகள் வசித்து வந்தவர்களை புலிகள் காப்பகம் பெயரில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வால்பாறை, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நிலை உள்ளது.
2006 வன உரிமை சட்டத்தை, தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் அமல்படுத்த திருத்தம் கொண்டு வர வலியுறுத்தி, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்.
தமிழகத்தின் முதல் பொதுத்துறை நிறுவனமான, உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைக்க, 100 கோடி நிதி ஒதுக்க பல ஆண்டுகளாக வலியுறுத்தப்படுகிறது. நிதி ஒதுக்காமல், மூடப்பட்டுள்ளது.
ஆயிரம் ஏக்கர் பரப்பளவு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கூட்டுறவு ஆலையை தனியாருக்கு தாரை வார்த்து, ஆளும்கட்சியினர் அபகரிக்கும் முயற்சியாகவே தெரிகிறது. 3.5 லட்சம் கோடி பட்ஜெட் போடும் தமிழக அரசு, ரூ.100 கோடி ஒதுக்க முடியாமல் மூடிவிட்டு, வெளி நாட்டு தொழில் முதலீடுகளை ஈடுபட்டு வருவது, கேலிக்குரியதாகும்.
பி.ஏ.பி., பாசன திட்டத்தில் நிலுவையிலுள்ள, ஆனைமலையாறு, நல்லாறு அணை மற்றும் அப்பர் அமராவதி அணை திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.