/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
அரசு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 19, 2024 10:07 PM

உடுமலை: உடுமலையிலுள்ள அரசு அலுவலகங்கள் முன், அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தமிழக முதல்வர் நிறைவேற்ற வலியுறுத்தி, உடுமலையிலுள்ள, தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட 20 அரசு அலுவகங்கள் முன், அரசு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் அம்சராஜ், வட்டக்கிளைச்செயலாளர் வெங்கிடுசாமி, நிர்வாகிகள் எலிசபெத், ஜெகதீஸ்வரன், மாபுஷ்பவள்ளி, தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும், 3.5 லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட, காலமுறை ஊதியமும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.
சாலைப்பணியாளர்கள், 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.