ADDED : ஜன 24, 2025 11:36 PM

அவிநாசி; தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் அவிநாசி, உடுமலைப்பேட்டை, ஊத்துக்குளி, காங்கேயம், தாராபுரம், திருப்பூர் தெற்கு,மடத்துக்குளம் என ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டத்தின் மாநில சங்கத்தின் முடிவின்படி 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, வட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் அவிநாசி தாலுகா அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலம் முறை ஊதியம் வழங்க வேண்டியும், கிராம உதவியாளர்களை அரசு ஊழியர்களின் பட்டியலில் டி பிரிவில் சேர்க்க கோரியும், கடந்த 1990ம் ஆண்டு கருணை அடிப்படையில் வாரிசு வேலை முன்னாள் முதல்வர் கருணாநிதியால், வழங்கப்பட்டதை போல மீண்டும் வாரிசு வேலையை வழங்க வேண்டி வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் பிப்., 5ம் தேதி மாலை 3:00 முதல் 6:00 மணி வரை தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டமும், 27ம் தேதி ஒரு நாள் சிறு விடுப்பு போராட்டமும் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.