/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீவிரமடையும் பருவ மழை: கொசு ஒழிப்பில் கவனம் தேவை
/
தீவிரமடையும் பருவ மழை: கொசு ஒழிப்பில் கவனம் தேவை
ADDED : அக் 22, 2025 10:58 PM
உடுமலை: வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகள் கொசு ஒழிப்பு பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. டெங்கு பாதிப்புகளை தடுக்க, டெங்கு கொசு ஒழிப்பு, நன்னீர் தேங்கும் காரணிகளை அகற்றுதல் உள்ளிட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
டெங்கு காய்ச்சல் 'ஏடிஸ்' வகை கொசுக்களால் உருவாகின்றன. தேங்கியுள்ள மழைநீர், பாத்திரங்கள், தொட்டிகளில் சேமித்து வைக்கப்படும் நன்னீர் ஆகியவற்றில் இக்கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
தொட்டிகளில், தண்ணீரைப் பெயரளவுக்கு மூடி வைக்காமல், காற்றுப்பு காத வகையில் மூடி வைப்பது அவசியம்.
வீணாக உள்ள டயர், தேங்காய் சிரட்டை, பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களில் மழைநீர் தேங்காமல், தாங்கள் வசிக்கும் பகுதி மற்றும் வீட்டின் சுற்றுப்புறங்களை பார்த்துக்கொள்ள வேண்டும்.
உள்ளாட்சி நிர்வாகங்கள், பொது இடங்களில் நன்னீர் தேங்குவதை தடுக்கவும், சுகாதார பணிகள், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. காலை மற்றும் மாலை நேரங்களில், கொசு மருந்து தெளித்தல், புகை அடித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
குடிநீர் வினியோக குளறுபடிகளால், பொதுமக்கள் பல நாட்கள் குடிநீரை சேமித்து வைத்து பயன்படுத்தும் சூழல் நிலவுகிறது. எனவே, உள்ளாட்சி அமைப்புகள் தினமும் குடிநீர் வினியோகம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

