/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்டிற்குள் கழிவு நீர் வெளியேற்றம் பயணியர் பாதிப்பு
/
பஸ் ஸ்டாண்டிற்குள் கழிவு நீர் வெளியேற்றம் பயணியர் பாதிப்பு
பஸ் ஸ்டாண்டிற்குள் கழிவு நீர் வெளியேற்றம் பயணியர் பாதிப்பு
பஸ் ஸ்டாண்டிற்குள் கழிவு நீர் வெளியேற்றம் பயணியர் பாதிப்பு
ADDED : அக் 22, 2025 10:57 PM
உடுமலை: உடுமலை பஸ் ஸ்டாண்டிற்குள், ஹோட்டல் மற்றும் கடைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, கேரளா மாநிலம் மூணாறு, கோவை, பழநி, திருப்பூர் என பல்வேறு பகுதிகளிலிருந்து, சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும், 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது.
தினமும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டில், பயணிகளுக்கு தேவையான, இருக்கை, குடிநீர் என அடிப்படை வசதிகள் இல்லை.
இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்திலுள்ள, ஹோட்டல்கள், பேக்கரி, டீ கடைகளிலிருந்து, நேரடியாக பஸ் ஸ்டாண்டிற்குள் கழிவு நீர் திறந்து விடப்படுகிறது.
கோவை பஸ்கள் வெளியே செல்லும் பகுதியிலுள்ள ஹோட்டலிலிருந்து, நேரடியாக உணவு கழிவுகள், அழுகிய இலைகள் என, மக்கள் நிற்கும் பகுதியிலேயே கழிவுகள் வெளியேற்றப்படுகிறது.
அதே போல், மூணாறு பஸ்கள், டவுன் பஸ்கள் நிற்கும் பகுதிகளில், கழிவு நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பஸ் ஸ்டாண்ட் பகுதியில், கடும் துர்நாற்றம் ஏற்படுவதோடு, கொசு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், பஸ் ஸ்டாண்டிலு ள்ள குழிகளிலும் தேங்கி, விபத்துக்களை ஏற்படுத்தி வருகிறது. எனவே, பஸ் ஸ்டாண்டில் கழிவு நீர் வெளியேற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கழிவு நீர் வெளியேற்றப்படுவதை தடுக்கவும், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

