/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுலா தொழில் முனைவோரே கவனிங்க!
/
சுற்றுலா தொழில் முனைவோரே கவனிங்க!
ADDED : ஜன 06, 2024 11:07 PM
திருப்பூர்:சுற்றுலா தொழில்முனைவோரை ஒழுங்கு படுத்தும் வகையில், தமிழக சுற்றுலாத்துறை சார்பில், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், பயண முகவர்கள், சுற்றுலா போக்குவரத்து ஏற்பாட்டாளர்கள், தொழில் உரிமத்தை பதிவு செய்யலாம். சுற்றுலா தொழில் சார்ந்த புதிய தொழில் துவங்குவது குறித்த வழிகாட்டுதல்கள், பதிவு செய்யும் நடைமுறைகள், www.tntourismtors.com என்கிற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா தொழில்முனைவோர், அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றி, இணையதளத்தில் பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை 0421 291187, 86674 45253 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.