/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏல தீர்மானம் ஒத்திவைப்பு; வியாபாரிகள் நன்றி
/
ஏல தீர்மானம் ஒத்திவைப்பு; வியாபாரிகள் நன்றி
ADDED : அக் 09, 2025 12:02 AM

திருப்பூர்; திருப்பூர் மாநகர மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில், பொதுக்குழு கூட்டம், காட்டன் மார்க்கெட் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தலைவர் தங்கமுத்து தலைமை வகித்தார். செயலாளர் மனோகர், துணை செயலாளர் மலர்விழி, முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியம், சங்க பொறுப்பாளர் நவமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
அனைத்து கட்சிகளின் ஆதரவுடனும் வியாபாரிகள் நலன் கருதியும், தனி ஏல தீர்மானம் கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்தனர். தினசரி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் ஏற்கனவே வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அக்., 31ம் தேதியன்று வாடகை பாக்கி தொகையை செலுத்துவது என்று வியாபாரிகள் முன்னிலையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.