/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கிளாசிக் போலோ'வில் ஆடி சிறப்பு விற்பனை
/
'கிளாசிக் போலோ'வில் ஆடி சிறப்பு விற்பனை
ADDED : ஜூலை 27, 2025 12:14 AM
திருப்பூர், : ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆடை ரகங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் கிளாசிக் போலோ நிறுவனம், ஆடி மாதம் முன்னிட்டு தனது நேரடி சிறப்பு விற்பனையை செய்து வருகிறது.
இதில், ஆண்களுக்கான டிசர்ட், சர்ட், பேண்ட் வகைகள் விற்பனையாகிறது. மேலும், உள்ளாடைகள், குளிர்கால ஆடைகள் உள்ளிட்ட பல வகையான ஆடை ரகங்களும் சலுகை விலையில் விற்பனையாகிறது.
இச்சிறப்பு ஆடி விற்பனை கடந்த, 12ம் தேதி துவங்கியது. வரும் 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
திருப்பூரில் பெரியாண்டிபாளையம், இடுவம்பாளையம் ரோட்டில் உள்ள கிளாசிக் போலோ வளாகத்தில் நடக்கிறது.
அதேபோல் தாராபுரத்தில் பழநி ரோடு, திண்டுக்கல் பிரிவு, கிளாசிக் போலோ வளாகம், பொள்ளாச்சியில், ஜமீன் ஊத்துக்குளி, மீன்கரை ரோட்டில், விவாஹா திருமண மஹாலிலும், கொமாரபாளையத்தில், என்.எச்., ரோடு எஸ்.எஸ்.எம்., கல்லுாரி எதிரேயுள்ள எஸ்.எஸ்.எம்., மகாலிலும் நடக்கிறது.
தினமும் காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை இந்த சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.