/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி பேரூராட்சி வணிக வளாகம் திறப்பு
/
அவிநாசி பேரூராட்சி வணிக வளாகம் திறப்பு
ADDED : டிச 20, 2024 04:14 AM

அவிநாசி; அவிநாசியில், 6 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வணிக வளாகம் மற்றும், 60 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நகர்ப்புற வீடற்றவர்கள் தங்கும் விடுதி ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி காணொலி காட்சி வாயிலாக, நேற்று திறந்து வைத்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு திட்ட பணிகள் துவக்கி வைக்கவும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் கலந்து கொள்ள வந்த தமிழக துணை முதல்வர் உதயநிதி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சியில், அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட்டில், பேரூராட்சி சார்பில், 6 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வணிக வளாகம் மற்றும் வாரச் சந்தையில் உள்ள இடத்தில், 60 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நகர்ப்புற வீடற்றவர்கள் தங்கும் விடுதி ஆகியவற்றை திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து, வணிக வளாகத்தில், புதிய வணிக வளாகத்தில், குத்து விளக்கேற்றும் நிகழ்ச்சியில் அவிநாசி தொகுதி தி.மு.க., பொறுப்பாளர் டாக்டர் கோகுல் கிருபாசங்கர், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன்நம்பி, பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாஷ், பால்ராஜ், பழனிசாமி, நகரச் செயலாளர் வசந்தகுமார் மற்றும் கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.